மாணிக்கம் பிள்ளை வகையறா
மாணிக்கம் பிள்ளைக்கு வெங்கிடாசலம் பிள்ளை, சோமு பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோவிந்தராஜ் பிள்ளை என நான்கு மகன்கள்.
வெங்கிடாசலம்பிள்ளை வாரிசுகள்
தேவதானம் பட்டிமாரில் வெங்கிடாசலம்பிள்ளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திக் என்கிற மகனும், செல்வி என்கிற மகளும் பிறந்தனர். கோவிலூர் சத்யா என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குமாரபுரம் ராமு பிள்ளை மகன் சிதம்பரம் என்பவருக்கு செல்வியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
சோமு பிள்ளை வாரிசுகள்
பஞ்சநதிகுளத்தில் சோமு பிள்ளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாடிமுத்து என்கிற மகனும், ராணி என்கிற மகளும் பிறந்தனர். ஜாம்பனோடை கிராமத்தில் திருமணம் செய்து கொண்ட நாடி முத்து தற்போது திருவாரூரில் வசிக்கிறார். குமாரபுரம் நாகராஜ் என்பவருக்கு ராணியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ப்ரியா உட்பட மூன்று மகள்கள் உள்ளர்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை வாரிசுகள்
மாங்குடி வேதவள்ளி என்பவரை மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு மாதவன், செல்வக்குமார், பிரபாகரன் என மூன்று மகன்கள். குமாரபுரத்தில் மாதவனுக்கும், குமாருக்கும் பெண் எடுத்தனர். வங்கநகர் கங்காதரன்பிள்ளை மகள் ராஜலெட்சுமி என்பவரை பிரபாகரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
கோவிந்தராஜ் பிள்ளை வாரிசுகள்
குமாரபுரம் ராமு பிள்ளை மகள் தையல்நாயகி என்பவரை கோவிந்தராஜ் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சாந்தி, 000 என இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சாந்தியை மண்ணுக்குமுன்டானில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக