வாத்தியார் வீடு
சீத்தாராம் வாத்தியார் அத்தானின் தந்தை பெயர் முத்துராஜூ. இவருடைய தம்பி சிலோன்கார் என்று அழைக்கப்பட்ட சுப்புராஜூ. இவர்களுடன் அம்சம், போலீஸ்காரர் கோவிந்த ராஜூ அம்மா என நான்கு பேர் பிறந்தனர்.
முத்துராஜூ வாரிசுகள்
முத்துராஜூக்கு இரண்டு மனைவிகள். முதல் தாரத்துக்கு ஜானகிராமன் என்கிற மகன் உள்ளார். முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக பிரசிடெண்ட் பெரியப்பா சகோதரி பாப்பம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார் முத்துராஜூ. இவர்களுக்கு சீத்தாராமன் வாத்தியார், முத்தழகிரி ராஜூ, சின்ன வாத்தியார் சேதுராமன் ராஜூ, ஜனார்தனம் என நான்கு மகன்கள்.
பாலுவின் சகோதரி ஜெயா என்பவரை ஜானகிராமன் ராஜூவுக்கு திருமண்ம செய்து வைத்தனர். இவர்களுக்கு காமேஸ்வரன் என்கிற ஒரு மகன் உள்ளனர்.
வடசங்கந்தி முத்துகிருஷ்ணராஜூ மகள் ராஜலட்சுமி, என்பவரை திருமணம் செய்து கொண்டார் வாத்தியார் சீத்தாராமன். இவர்களுக்கு சதீஸ்குமார், ரஜீஸ்குமார் என இரண்டு மகன்களும், ஜானசி ராணி என்கிற ஒரு மகளும் உள்ளனர். ஜான்சி ராணியை, மருந்து கடை பெரியப்பாவின் இரண்டாவது மகன் மோகன்தாஸ்க்கு திருமணம் செய்து வைத்தனர். அதாவது தாய் மாமனை மணந்துள்ளார் ஜான்சி ராணி. இவர்களுக்கு ரூபவர்ஷன் என்கிற மகனும், வைஷாலி என்கிற மகளும் உள்ளனர். சதீஸ்குமார். எம்.எஸ்.சி. பி.எட் பட்டதாரியான இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள BSNL-ல் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருவாரூர் மாவட்டம் புலிவலம், நா.ராதாகிருஷ்ண ராஜூ - இந்திராணி தம்பதியினரின் மகள், துளசி என்கிற கிரிஜா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
![]() |
| சுரேஷ் |
வடசங்கந்தி முத்துகிருஷ்ணராஜூ மகள் ராணியை திருமண்ம செய்து கொண்டார் சின்ன வாத்தியார் சேதுராமன் ராஜூ. இவர்களுக்கு மனோஜ்குமார், பிரவீண்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சுப்புராஜூ வாரிசுகள்
சிலோன்கார் என்று அழைக்கப்பட்டவர் சுப்புராஜூ. இவரது மனைவி பெயர் தனலட்சுமி. இவர்களுக்கு பால்ராஜூ, புஷ்பராஜூ, ஜெகா என்றழைக்கப்படும் அழகிராஜூ என நான்கு மகன்களும், ஜெயா, விஜயா என இரண்டு மகள்களும் உள்ளர்.
புதுக்கோட்டை கீதாவை, பால்ராஜூக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கீர்த்தனா, சுதா என மூன்று மகள்கள். மதுரையில் உள்ள மாமன் மகளை புஷ்பராஜூவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அழகிரிராஜூவுக்கும் புதுக்கோட்டையில் திருமணம் செய்தனர். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் போலீஸ் வேலையில் இருக்கிறார். மதுரையில் ஜெயா, விஜயா இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். விஜயாவுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
அம்சம் வாரிசுகள்
ராமகிருஷ்ண ராஜூவுக்கு வாத்தியாரின் அத்தை அம்சத்தை திருமணம் செய்து வைத்தனர்.
கோவிந்தராஜூ அம்மா
போலீஸ்காரர் கோவிந்தராஜூ தந்தையின் பெயர் கிருஷ்ணன். இவருக்கு கிருஷ்ணன், ஜெயராமன் என இரு மகன்களும், சுபா என்கிற மகளும் பிறந்தனர்.
கிருஷ்ணனுக்கு கறம்பக்குடி ஆனந்தி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு காவ்யா என்கிற மகளும், ரிச்சாஸ் என்கிற மகனும் உள்ளனர். ஜெயராமுக்கு பெங்களூரில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு ஒரு மகன் உள்ளார். சுபாவை மாயவரத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முத்து ராஜூவின் பங்காளி காமாட்சி ராஜூ. அவர் சிறுவயதிலேயே சென்னையில் செட்டிலாகிவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக