ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

செம்பட்டையான் வகையறா

வடசங்கந்தி கிராமத்தில் வாழ்ந்த செம்பட்டையான் என்பவருக்கு பெரிய காத்தான், கட்ட காத்தான், ராவுத்தன், வீரன் என நான்கு மகன்கள் பிறந்தனர்.

பெரிய காத்தான் வாரிசுகள்
பெரிய காத்தானுக்கு வேலு, பட்டாணி என இருமகன்கள்.


வேலு குடும்பம்  
இதில் வேலுவுக்கு கொட்டான் என்கிற மனைவியும் தெய்வானை, பேச்சாயி, முருகம்மாள் என்கிற மூன்று மகள்களும் பிறந்தனர்.

தெய்வானையை வடசங்கந்தி வீரனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். இவர்களுக்கு சுப்பம்மாள், வசந்தா, சமுத்திரவள்ளி என்று மூன்று மகள்கள். சுப்பம்மாளை மேல மருதூர்  ஞானசேகரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பேச்சாயியை வடசங்கந்தி மன்னாரு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. அதன் பிறகு வீரன் மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயந்தி என இருமகள்கள் உள்ளனர். ஜெயந்தியை பாண்டி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

முருகம்மாளை கீழ்ப்பெருமழை தர்காசி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். இவர்களுக்கு சிவதாஸ் என்கிற ஒரு மகன் உள்ளார். ராஜமாணிக்கத்திடம் இருந்து பிரிந்த பிறகு உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் முருகம்மாள். அங்கு அவருக்கு ஒரு மகன் உள்ளார்.


பட்டாணி குடும்பம்
பட்டாணி, தில்லைவிளாகம் நெத்தாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னம்மாள் என்கிற மகள் உள்ளார். இவரை முத்துசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு பாலையன் என்கிற மகன் உள்ளார்.

கட்ட காத்தான் வாரிசுகள்
கட்ட காத்தான் – பக்கிரியம்மாள் தம்பதிகளுக்கு குமரன், குஞ்சையன் அஞ்சான், மாரிமுத்து, சிங்காரு என ஐந்து மகன்களும், வைரம் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

குமரன் குடும்பம்
கு.பொன்னுச்சாமி 
குமரன் மஞ்சுகோட்டகம் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னுச்சாமி, சுப்பிரமணியன் என இரண்டு மகன்களும், ஜானகி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

மஞ்சுகோட்டகம் சுந்தரம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார், பொன்னுச்சாமி. இவர்களுக்கு குழந்தை இல்லை.

அக்கரகோட்டகம் காந்திமதி என்பவரை திருமணம் செய்து கொண்ட சுப்பிரமணியன், பிறகு மன நலம் சரியில்லாமல் இருந்தார். .

இதனால், காந்திமதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார், பொன்னுச்சாமி. இவர்களுக்கு கலைச்செல்வி, ஜெயலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கலைச்செல்வியை வேதாரண்யம் சேகர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு கௌசல்யா என்கிற மகளும், கௌதமன் என்கிற மகனும் உள்ளனர். ஜெயலட்சுமியை வேதாரண்யத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குஞ்சையன் குடும்பம்
சந்தனநல்லூர் வடுவம்மாள் என்பவரை குஞ்சையன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உத்திராபதி, மாரிமுத்து என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். மகள்கள் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.,

உத்திராபதி, இராயநல்லூர் நயினார் மகள் காசியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைரக்கண்ணு, கண்ணன் என இரண்டு மகன்களும், விஜயா என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

வைரக்கண்ணு சேலம் ஆத்தூர் அழகாபுரம் மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பைரவ வசந்த் என்கிற மகனும், வர்ஷினி என்கிற மகளும் பிறந்தனர்.

குமாரபுரம் கலையரசி என்பவரை, கண்ணன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாஸ்தா என்கிற மகனும், தாரணி, உதயா என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

அம்மளூர் வேல்முருகன் என்பவருக்கு விஜயாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு விஜயகாந்த் என்கிற மகன் இருக்கிறார்.

வைரமூர்த்தி - செம்மலர்
சன்னாநல்லூர் பிச்சையம்மாள் என்பவரை மாரிமுத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைரமூர்த்தி என்கிற ஒரு மகன் பிறந்தார். கீவளூர் செம்மலர் என்பவரை வைரமூர்த்தி திருமணம் செய்து கொண்டார்.

அஞ்சான் குடும்பம்
ஆரியலூர் வேலாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அஞ்சான். இவர்களுக்கு குழந்தை இல்லை.


மாரிமுத்து குடும்பம்
ஓவரூர் பாப்பு என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார் மாரிமுத்து. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அதன் பிறகு குமாரபுரம் ஜானகி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். அதில் இரு மகன்கள் இறந்துவிட்டனர். 

மகன்களுக்கு முருகையன், தம்புசாமி, அய்யாக்கண்ணு, துரைசாமி, கதிர்வேல் என்றும், வைரம், அஞ்சம்மாள் என மகள்களுக்கும் பெயர் வைத்தனர். .

மணியன் என்கிற முருகையன், மேட்டுப்பாளையம் பங்கஜம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தம்புசாமி. இவர்களுக்கு ராஜசேகர், ராஜா என இரு மகன்கள் உள்ளனர்.

விளக்குடி அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அய்யாக்கண்ணு. இவர்களுக்கு அன்பரசி, திவ்யா, அனுஷியா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். அதில் திருவாரூர் பிரபாகரன் என்பவருக்கு அன்பரசியை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

திருக்களார் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் துரைசாமி. இவர்களுக்கு பைரவன், முரளி என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கோட்டூர் அருகே உள்ள கோமாளாப்பேட்டை சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கதிர்வேலு. இவர்களுக்கு யோகேஸ்வரன், ரித்தீஸ் என இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகள் வைரத்தை வடசங்கந்தி மன்னாரு என்கிற ஜெகன்னாதனுக்கு திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு ரவி, ஐயப்பன், மணிகண்டன், துரைராஜ் என நான்கு மகன்களும், வெண்ணிலா என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

பாண்டி கிராமத்தை சேர்ந்த மாலதி என்பவரை ரவிக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சூர்யா என்கிற மகனும், சந்தியா என்கிற மகளும் உள்ளனர்.

வடசங்கந்தி கோவிந்தராஜ் மகளை, ஐயப்பன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீபன் என்கிற மகனும், மதுமிதா என்கிற மகளும் உள்ளனர்.

சோழகநல்லூரில் மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்

கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி கிராமத்தை சேர்ந்த நித்யா என்பவரை துரைராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சத்யராஜ் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்,

அஞ்சம்மாள் வாரிசுகள்
திருக்களர் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த நடராசன் என்பவரை அஞ்சம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்ரா என்கிற மகளும், மகேந்திரன், சுரேஷ் என்கிற மகன்களும் பிறந்தனர்.

வடசங்கந்தி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் துரைசாமி என்பவரை சித்ரா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பைரவன், முரளி என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கோட்டூரில் திருமணம் செய்து கொண்ட மகேந்திரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே போல அக்கரகோட்டகம் கிராமத்தில் சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

சிங்காரு குடும்பம்
அஞ்சம்மாள் சிங்காரு
கள்ளிக்குடி வள்ளியம்மை என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார் சிங்காரு. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து இறந்துவிட்டார். அதன் பிறகு வடசங்கந்தி வடக்குதெரு தெட்சிணாமூர்த்தியின் சகோதரி அஞ்சம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜேந்திரன், கதிர்வேல், பாலசுப்பிரமணியன், கார்த்திக் என நான்கு மகன்களும், மைனாவதி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

வடசங்கந்தி வடக்குதெரு தெட்சிணாமூர்த்தியின் மகள் சுசீலாவை ராஜேந்திரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகேந்திரன், சுரேந்திரன் என இரு மகன்களும், வைஜெயந்தி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

வங்கத்தான்குடி கிராமத்தை சேர்ந்த நாகவள்ளி என்பவரை கதிர்வேல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பைரவராணி என்கிற ஒரு மகள் இருக்கிறார்.

வடசங்கந்தி தெற்கு தெரு மாரியப்பன் மகள் மல்லிகாவை, பாலசுப்பிரமணியன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகவன் என்கிற மகனும், மரியா என்கிற மகளும் உள்ளனர்.

சங்கேந்தி ஜெயா என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைதீஸ்வரன் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சோத்திரியம் கிராமத்தை சேர்ந்த பிச்சக்கன்னு என்பவருக்கு மைனாவதியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு துரையரசன் என்கிற மகனும், அமலா என்கிற மகளும் உள்ளனர்.


வைரம் குடும்பம்
கட்ட காத்தான் – பக்கிரியம்மாள் தம்பதியின் மூத்த மகள் வைரத்தை, இராயநல்லூர் நயினார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.


கட்ட காத்தான் – பக்கிரியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகளை   ஆரியலூரில் திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு பாப்பாத்தி என்கிற ஒரு மகள் பிறந்தார். இவரை சங்கேந்தி வெங்கிடாசலம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு சசி, ஜீவா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ராவுத்தன் வாரிசுகள்
குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குப்பாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராவுத்தன். இவர்களுக்கு வேலு, வைரவன், கருப்பையன், குஞ்சையன் என நான்கு மகன்களும், தங்கங்கம்மாள், வீரம்மாள் என்கிற இரு மகள்களும் பிறந்தனர்.


வேலு குடும்பம்
ஓரத்தூரில் திருமணம் செய்து கொண்டார் வேலு. இவர்களுக்கு மதியழகன் என்கிற மகன் உள்ளார். இவரும் ஓரத்தூரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கபிலன், ஜீவானந்தம், தசரதன் என மூன்று மகன்கள் உள்ளனர்.


வைரவன் குடும்பம்
வங்கநகர் கிராமத்தை சேர்ந்த வள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டார் வைரவன்.

கருப்பையன் (கூலையன்) குடும்பம்
புஷ்பவள்ளி  சண்முகம்
வடசங்கந்தி தெற்கு தெரு முண்டு என்பவரின் மகள் அஞ்சம்மாளை திருமணம் செய்து கொண்டார் கருப்பையன். இவர்களுக்கு முருகையன் என்கிற மகனும், புஷ்பவள்ளி, தமிழரசி என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

நெடும்பலம் மைனாவதி என்பவரை திருமணம் செய்து கொண்ட முருகையன், பிறகு மைனாவதியின் சகோதரி சரஸ்வதியையும் திருமணம் செய்து கொண்டார்.

மைனாவதிக்கு சங்கர் என்கிற மகனும், சூரியகலா, சந்திரகலா என்கிற இரு மகள்கள் உள்ளனர். சரஸ்வதிக்கு பைரவன் என்கிற மகனும், ஜானகி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

வடசங்கந்தி கிட்டு என்கிற சண்முகத்திற்கு புஷ்பவள்ளியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு சத்யராஜ் என்கிற மகனும், பாமா என்கிற மகளும் உள்ளனர்.

வடசங்கந்தி தர்மலிங்கம் மகனும், கன்னிச்சாமியின் மகள் சரோஜாவின் மகனுமான மணிமுத்து என்பவரை தமிழரசி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு படையப்பன் என்கிற மகனும், சுவாதி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

குஞ்சையன் குடும்பம்
ஓவரூர் கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்பவரை குஞ்சையன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரி என்கிற ஒரு மகள் இருக்கிறார்.

ஆரியலூர் முருகையன் என்பவரை தங்கங்கம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கள்ளிக்குடி ரங்கன் என்பவரை வீரம்மாள் திருமணம் செய்து கொண்டர. இவர்களுக்கு நாகூரான், வைத்தி என இரண்டு மகன்களும், மணி, சித்ரா என்று இரண்டு மகள்களும் பிறந்தனர்.

வீரன் வாரிசுகள்
ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த காத்தாயி என்பவரை, வீரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராவுத்தன், காளிமுத்து, மாரிமுத்து, பட்டாணி, ராமையன் என ஐந்து மகன்களும், வடுவம்மாள், வைராயி என இரு மகள்களும் பிறந்தனர். இதில் இளம் வயதிலேயே மாரிமுத்து, பட்டாணி இருவரும் இறந்து விட்டனர்.

தெட்சிணாமூர்த்தி, வைரக்கண்ணுவுடன் பாலன்
ராவுத்தன் குடும்பம்.
வடசங்கந்தி வடக்குதெரு தெட்சிணாமூர்த்தியின் சகோதரி குஞ்சம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராவுத்தன். இவர்களுக்கு வைரக்கண்ணு, கோவிந்தராஜ், முருகையன் என மூன்று மகன்கள் உள்ளனர்.

மாமன் தெட்சிணாமூர்த்தியின் மூத்த மகள் தனலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் வைரக்கண்ணு. இவர்களுக்கு ராமச்சந்திரன், கோபிநாத் என இரு மகன்கள் உள்ளனர்.

கரிசக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெகதாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கோவிந்தராஜ். இவர்களுக்கு பைரவி, தீபா என இரண்டு மகள் உள்ளனர்.

மாமன் தெட்சிணாமூர்த்தியின் இளைய மகள் ரத்தினம்பாளை திருமணம் செய்து கொண்டார் முருகையன். இவர்களுக்கு ராம்குமார், ராஜ்குமார் என இரண்டு மகன்களும், பிருந்தா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

காளிமுத்து குடும்பம்
மாரிநகரி கிராமத்தை சேர்ந்த பாக்யம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் காளிமுத்து. இவர்களுக்கு தெட்சிணாமூர்த்தி, அன்பழகன், பாஸ்கர் ஆகிய மூன்று மகன்களும், ஜெயலட்சுமி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

பண்ணவயல் இராசவள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டார் தெட்சிணாமூர்த்தி. இவர்களுக்கு அசோக்குமார், விஜயகுமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

மங்களூர் காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அன்பழகன். இவர்களுக்கு ஆனந்த், ஆகாஷ் என்கிற இரு மகன்களும், அபிராமி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

குமாரபுரம் புனிதா என்பவரை பாஸ்கர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


இராமையன்
ராமையன் குடும்பம்
கட்டிமேடு விஜயா என்பவரை ராமையன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைரம், மாலதி, தமிழ்செல்வி என மூன்று மகள்களும், பைரவன் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

விஜயா ராமையன் 
வடுவம்மாள் குடும்பம்
செந்தாமரைக்கண் கிராமத்தை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரை வடுவம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாரிசுகள் அமையவில்லை.  

வைராயி குடும்பம்
கொத்தமங்கலம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட வைராயிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக