திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஒன்றித்திற்குள் இருக்கிறது எனது வடசங்கந்தி கிராமம், முன்பு தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது. இப்போது திருவாரூர் மாவட்டமாகிவிட்டது.
இங்கு அகமுடைய தேவர், பிள்ளை, தெலுங்கு மொழி பேசும் ராஜூ, வெள்ளாளர், நாடார், நாட்டரசர், பள்ளர் போன்ற சாதி பிரிவுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். ஆரமப காலம் தொட்டு, இன்றுவரை சாதிய பூசல்கள் இங்கு வந்ததில்லை. அனைவரும் வயலில் இறங்கி பாடுபட்டு வாழ்பவர்கள். எல்லோரும் சிறுவிவசாயிகள்தான்.
ஆரம்பத்தில் பழைய பட்டாமணியார் சீனிவாசராஜூ பெரும் நிலக்கிழாராக வாழ்ந்திருக்கிறார். அதே போல சுந்தர்ராஜூ, மங்குபதி ராஜூ, நரசிம்ம ராஜூ, கிட்டு ராஜூ, தீனதயாளுராஜூ, கமலுப்பிள்ளை, மாணிக்கம் பிள்ளை, கோவிந்தப்பிள்ளை, சுப்பையாத் தேவர், நாராயணதேவர், காத்தபெருமாள் தேவர், தேவர் வீடு, கணபதி நாடார், தெட்சிணாமூர்தி தந்தை சிங்காரு, ராமன், அஞ்சலை குடும்பம் போன்றவர்கள் பெரும் மிராசுதாரர்களாக இருந்தார்கள்.
தற்போதைய தகவல் படி ஆண்கள் 342, பெண்கள் 348 என மொத்தம் 690 பேர் வசிக்கின்றனர்
வடசங்கந்தி கிராமத்தில் பூர்வீக தமிழ் குடி
பதிலளிநீக்குஅகமுடையார்
தேவேந்திர குல வேளாளர்
வெள்ளாளர்
நாடார்
நாயுடு (தெலுங்கு)
என்பது குறிப்பிடத்தக்கது